இன்றைய ராசிபலன் (09.07.2026): உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள்...!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (09.07.2026): உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள்...!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : வியாழக்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆனி மாதம்

நாள் : 25

ஆங்கில தேதி : 9

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : அசுவதி நட்சத்திரம் பகல்(11.25)க்கு மேல் பரணி நட்சத்திரம்.

திதி : நவமி திதி காலை(6.22)க்கு மேல் தசமி திதி

யோகம்: அமிர்தயோகம் பகல் (11.25)க்குமேல் சித்தயோகம்.

நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

நல்ல நேரம் மாலை : 05.00 - 06.00

ராகு காலம் : மதியம் 01.30 - 03.00

எமகண்டம் : காலை 06.00 - 07.30

குளிகை : காலை 09.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை : -

கௌரி நல்ல நேரம் மாலை : 06-30 - 07-30

சூலம் : தெற்கு

சந்திராஷ்டமம் : சித்திரை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள்.ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள். விலை உயர்ந்த பொருளொன்றை வாங்கும் முயற்சி கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

கடகம்

அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். கைநழுவிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

சிம்மம்

உதிரியாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை கிடைக்கும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

கன்னி

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும். உத்தியோ கத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: செந்நிறம்

துலாம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

அதிர்ஷ்ட நிறம்: பொன் மஞ்சள்

விருச்சிகம்

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

தனுசு

உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்லவேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா நிறம்

மகரம்

உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தைரியமும், தன்னம்பிக்கை யும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக முடிவிற்கு வரும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் பாராட்டுக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

X

Daily Thanthi
www.dailythanthi.com