

கிழமை : வெள்ளிக்கிழமை
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : புரட்டாசி
நாள் : 22
ஆங்கில தேதி : 9
மாதம் : அக்டோபர்
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று இரவு 10.20 மணி வரை உத்திரம், பின்னர் அஸ்தம்.
திதி : இன்று இரவு 09.52 மணி வரை சதுர்த்தசி, பின்னர் அமாவாசை.
யோகம் : சித்த, அமிர்த யோகம்.
நல்ல நேரம் : காலை 09.15 – 10.15
நல்ல நேரம் : மாலை 04.45 – 05.45
ராகு காலம் : காலை 10.30 – 12.00
எமகண்டம் : மதியம் 03.00 – 04.30
குளிகை : காலை 07.30 – 09.00
கௌரி நல்ல நேரம் : காலை 12.15 – 1.15
கௌரி நல்ல நேரம் : மாலை 06.30 – 07.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்.
இன்று வழக்கமான முறையை மாற்றி செயல்படுவீர்கள். உங்களின் செயல்திறன் புதிய கவனத்தைப் பெறும். எதிர்பாராத சந்தர்ப்பம் ஒன்று சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக காத்திருந்த பதிலுக்கு விடை கிடைக்கும். பணியில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவது நல்ல பலனைத் தரும்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவாகும். தொழிலில் தைரியமாக எடுத்த முடிவு முன்னேற்றத்தைத் தரும். வியாபாரத்தில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கலாம். வரவு செலவில் இதுவரை இருந்த அழுத்தம் குறையும்.
குடும்பத்தில் உங்கள் முயற்சியால் ஒரு பிரச்சினை தீரும். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
இன்று சிறிய முயற்சியிலேயே எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். பணியில் மறைந்திருந்த திறமை வெளிப்படும். உங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்பனையாகும். சேமிப்பு தொடர்பான நல்ல முடிவை எடுப்பீர்கள். வருமானத்திற்கு இணையாக செலவுகளையும் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
உங்களின் பொறுமைக்கு உரிய பலன் கிடைக்கும். வீடு சம்பந்தமான முயற்சியில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப் பச்சை
இன்று வேகமாக செயல்படுவதைவிட விவேகமாக அணுகுவது சிறந்தது. புதிய தகவல் ஒன்று உங்களின் திட்டத்திற்கு வலுசேர்க்கும். பணியிடத்தில் முக்கியமான ஒருவரின் பார்வை உங்களுக்கு சாதகமாகும்.
கடினமாகத் தோன்றிய வேலை எளிதாக நிறைவேறும். தொழிலில் எதிர்கால வளர்ச்சிக்கான எண்ணம் உருவாகும்.
வியாபாரத்தில் புதிய பொருளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும். புதிய வருமான வழியைப் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரின் சாதனை பெருமை தரும். தொலைவில் உள்ளவரிடமிருந்து இனிய செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விஷயம் முடிவுக்கு வரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் நிதானமான அணுகுமுறை பாராட்டப்படும். முக்கியமான பணியை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
தொழிலில் அனுபவம் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைகூடலாம். பணத்தை பாதுகாப்பாக கையாளும் எண்ணம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.
உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். மன அமைதிக்காக ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
இன்று உங்கள் முயற்சிக்கு உரிய வெளிச்சம் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியத்தில் வேகம் அதிகரிக்கும். பணியிடத்தில் முக்கியமான முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகும். தொழிலில் புதிய கூட்டணி உருவாகலாம்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் பழைய சிக்கலுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் தலைமைப் பொறுப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் அன்பும் ஆதரவும் மனநிறைவைத் தரும். புதிய பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: குங்கும சிவப்பு
இன்று ஒவ்வொரு செயலிலும் தெளிவான அணுகுமுறை இருக்கும். சிறிய தவறை சரிசெய்து பெரிய சிக்கலை தவிர்ப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் ஒழுங்குமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகும். நிலுவையில் இருந்த ஆவணப் பணிகள் முடிவடையும். தொழிலில் செலவைக் குறைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள்.
வியாபாரத்தில் கணிசமான மாற்றம் ஏற்படலாம். பணத்தை தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்துவீர்கள். குடும்பத்தில் அன்பான உரையாடல் நடைபெறும். பிள்ளைகளின் முயற்சியில் மகிழ்ச்சி காண்பீர்கள். உடல் புத்துணர்ச்சிக்காக நடைப்பயிற்சியில் கவனம் செலுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
இன்று உங்கள் சமூக தொடர்புகள் விரிவடையும். புதிய மனிதர்களின் அறிமுகம் எதிர்காலத்திற்கு பயனளிக்கும். பணியில் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். முன்னர் ஒத்திவைத்த ஒரு பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தொழிலில் வளர்ச்சிக்கான புதிய வாயில் திறக்கும்.
வியாபாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சாதகமான முடிவு கிடைக்கும். வருமானத்தைப் பெருக்கும் முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான ஏற்பாடு ஒன்று நடைபெறும்.
நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்வீர்கள். நீண்டநாள் ஆசை ஒன்றை நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வென்பட்டு நிறம்.
இன்று உங்கள் மன உறுதி முக்கியமான வெற்றியைத் தேடித்தரும். பிறர் தடுத்தாலும் உங்கள் முயற்சியை கைவிடமாட்டீர்கள். பணியில் எதிர்பார்த்த முடிவு சற்று தாமதமாக கிடைக்கலாம். முக்கியமான சந்திப்பில் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும்.
தொழிலில் துணிச்சலான நடவடிக்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் மறைமுகமான வாய்ப்பு ஒன்று வெளிப்படும். பண வரவில் எதிர்பாராத ஆதாயம் சேரலாம். சொத்து தொடர்பான பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நீண்டநாள் கவலைக்கு முடிவு கிடைக்கும். மனதில் இருந்த அச்சம் படிப்படியாக விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: மரகத பச்சை
இன்று புதிய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை அளிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய முக்கியமான முடிவை எடுப்பீர்கள். பணியில் உங்களின் சுய முயற்சிக்கு பலன் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் தேடி வரும்.
தொழிலில் புதிய இடத்துடன் தொடர்பு ஏற்படும். வியாபாரத்தில் தொலைதூர வாடிக்கையாளர்களால் நன்மை கிடைக்கும். வருமானத்தில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி தொடர்பான பேச்சு தொடங்கும். நண்பர் ஒருவரின் உதவி முக்கியமான நேரத்தில் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
இன்று உழைப்பின் பலனை நேரடியாக உணரும் நாள். நீண்ட கால திட்டத்தில் ஒரு முக்கிய கட்டத்தை நிறைவு செய்வீர்கள். பணியிடத்தில் உங்கள் பொறுப்பு உயரலாம். அதிகாரமுள்ள ஒருவரின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் பழைய அனுபவம் புதிய வாய்ப்பை உருவாக்கும். வியாபாரத்தில் லாபகரமான முடிவு எடுக்கப்படும். நிதி சார்ந்த திட்டங்களை மறுபரிசீலனை செய்வீர்கள். சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மூத்தவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுடன் பயனுள்ள ஆலோசனை நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
சந்திராஷ்டமம் காரணமாக மனதில் சிறிய குழப்பங்கள் ஏற்படலாம். முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்காமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் பிறர் கூறும் வார்த்தைகளை உடனடியாக நம்ப வேண்டாம். செய்து முடித்த பணிகளையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்களை கவனமாக அணுக வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவு சற்று தாமதமாகலாம். பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியை பேணுங்கள். தம்பதியரிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். உறவினர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளின் விஷயத்தில் பொறுமையாக செயல்படுங்கள். மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்க்க வேண்டும்.
படிப்பில் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது பயனளிக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை சற்று தாமதித்து தொடங்கலாம். உடல் சோர்வு அல்லது தூக்கக் குறைவு ஏற்படலாம். போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. மாலை நேரத்திற்குப் பிறகு மனநிலை தெளிவடையும். பொறுமையுடன் செயல்பட்டால் நாளை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மயில் கழுத்து பச்சை நிறம்
இன்று எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் வந்து சேரும். பணியில் உங்களின் பொறுமை வெற்றிக்கு துணையாக இருக்கும். முக்கியமான தகவலை கவனமாக பயன்படுத்துவீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் வாய்ப்பு உருவாகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த வர்த்தகம் நடைபெறும். பண நிலை சீராகி மனநிம்மதி ஏற்படும். பொருளாதாரத்தில் புதிய திட்டத்தை வகுப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நீடிக்கும். தொலைதூர உறவினரிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடற்பச்சை