தடைகளைத் தாண்டி சாதனை படைப்பீர்கள்... வார ராசிபலன்: அக்டோபர் 04 முதல் 10 வரை..!

04-10-2026 முதல் 10-10-2026 வரை 12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
தடைகளைத் தாண்டி சாதனை படைப்பீர்கள்... வார ராசிபலன்: அக்டோபர் 04 முதல் 10 வரை..!
Published on: 

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசியினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் மூலம் தனவரவு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு பணவசதி இருக்கும். சேமிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் நன்மைகள் ஏற்படும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் மனநிறைவு உண்டாகும். சமூகத்தில் உங்கள் நற்பெயரும் செல்வாக்கும் உயரும்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் வருகையால் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் சவால்களைத் திறமையாகச் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். ஓய்வில் கவனம் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். முருகப்பெருமானையும் வழிபடவும். சிவப்பு நிறக் கைக்குட்டையை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

ரிஷபம்

கிரக அமைப்புகளின்படி இந்த வாரம் ரிஷப ராசியினருக்கு பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுக்கேற்ப சேமிப்பும் அதிகரிக்கும். கையில் பணம் தங்கும். நிதி தொடர்பான எதிர்பார்ப்புகள் சாதகமாக நிறைவேறும்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றம் மனநிறைவு அளிக்கும். உறவினர்களின் பாராட்டும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பணியிடத்தில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு சோர்வு ஏற்படலாம். போதிய ஓய்வு எடுக்கவும். மகாலட்சுமியை மனதார வழிபடவும். வெள்ளை நிறப் பூக்களைப் பயன்படுத்துவது நல்லது. வாசமுள்ள வெள்ளை நிற மலர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் மனநிம்மதியையும் தரும்.

மிதுனம்

இந்த வாரம் மிதுன ராசியினருக்கு குருவின் பார்வையால் தனவரவு அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வண்டி வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். நிதி நிலை சீராகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரித்து, பலரது பாராட்டைப் பெறுவீர்கள்.

தொழிலில் இருந்த முடக்கம் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். புதிய பொறுப்புகளைத் திறம்பட ஏற்றுச் செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுடன் சவால்களை வெல்வீர்கள்.

நரம்பு தொடர்பான சிறு உபாதைகள் ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. வடக்கு பார்த்த பெருமாளை வழிபடவும். முக்கிய முடிவுகளில் நிதானமாகச் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். இளநீல நிற ஆடை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

கடகம்

இந்த வாரம் கடக ராசியினருக்கு சந்திர பலத்தால் தனவரவு சீராக இருக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். தேவையற்ற செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரித்து பொருளாதார நிலையில் நிம்மதி ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனதுக்கு உற்சாகம் அளிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து, நற்பெயர் கிடைக்கும்.

தொழில் தொடர்பான பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக பணியாளர்களின் ஆதரவுடன் பணிகளைச் சிறப்பாக முடித்து வெற்றி பெறுவீர்கள்.

வயிற்று வலி - செரிமானக் கோளாறு ஏற்படலாம். உணவில் கவனம் தேவை. தினசரி உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும். பொன்மஞ்சள் நிற பொருள், ஆடைகள் அதிர்ஷ்டம் தரும்.

சிம்மம்

இந்த வாரம் சிம்ம ராசியினருக்கு வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய வழிகளில் பணவரவு கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏற்படும் சுபச்செலவுகள் மன மகிழ்ச்சியைத் தரும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு உற்சாகம் அளிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் மேலும் உயரும்.

தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பணியிடச் சவால்களைத் திறமையாகச் சமாளித்து சாதனை படைப்பீர்கள்.

கண் எரிச்சல் அல்லது தலைவலி ஏற்படலாம். அதிக நேரம் கணினி அல்லது கைப்பேசி பார்ப்பதைத் தவிர்க்கவும். போதிய ஓய்வு அவசியம். அன்றாடம் மனதார சூரிய நாராயணரை வழிபடவும். ஆரஞ்சு நிற ஆடை, பொருட்கள் அதிர்ஷ்டம் தரும்.

கன்னி

இந்த வாரம் கன்னி ராசியினருக்கு புதனின் ஆதரவால் தனவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். பொருளாதார நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் அளிக்கும். நண்பர்களின் உதவியும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயரும் செல்வாக்கும் உயர்ந்து, பலரது பாராட்டைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் வருகையால் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தோல் தொடர்பான தொந்தரவுகள் - ஒவ்வாமை ஏற்படலாம். தூய்மை மற்றும் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தவும். தினமும் மகாவிஷ்ணுவை வழிபடவும். ஏதேனும் வெள்ளை நிறப் பொருளை உடன் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

துலாம்

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்படும். தனவரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பணநிலை மேம்பட்டு மனநிம்மதி ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்–மனைவி இடையே அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உற்சாகத்தைத் தரும். சமூகத்தில் உங்கள் நற்பெயரும் கௌரவமும் உயரும்.

தொழிலில் புதிய முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். புதிய வேலைவாய்ப்புகளும் தேடிவரும். பணியிடச் சவால்களைத் திறம்படச் சமாளிப்பீர்கள்.

தலைச்சுற்றல் அல்லது சோர்வு ஏற்படலாம். போதிய ஓய்வு எடுக்கவும். மனஅமைதிக்காக சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது. ஸ்ரீதுர்க்கை அம்மனை அன்றாடம் வழிபடவும். வெள்ளை நிறக் கைக்குட்டை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிக ராசியினருக்கு லாப ஸ்தான பலத்தால் தனவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் கிடைக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் சாதனைகள் பெருமை அளிக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயரும் செல்வாக்கும் உயரும்.

தொழிலில் புதிய கூட்டாளிகளின் வருகையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடச் சவால்களைத் திறமையாகச் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

உடலில் உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம். காரமான உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது. போதிய தண்ணீர் குடிக்கவும். மாலை நேரங்களில் முருகப்பெருமானை வழிபடவும். இளம் சிவப்பு நிற ஆடைகள் அணிவது அதிர்ஷ்டம் தரும்.

தனுசு

இந்த வாரம் தனுசு ராசியினருக்கு குருவின் அருளால் பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவு அதிகரிப்பதால் தேவைகளைச் சிரமமின்றி நிறைவேற்றுவீர்கள். சேமிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். தந்தை மற்றும் குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தரும். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் உயர்ந்து, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தொழிலில் புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் பொறுப்புகள் அல்லது இடமாற்றம் தொடர்பான வாய்ப்புகள் வரலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடச் சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்து சாதனை படைப்பீர்கள்.

காது வலி அல்லது மூட்டு வலி போன்ற சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். உடலுக்கு ஓய்வு அளிக்கவும். மனஅமைதி பெற பிரார்த்தனை செய்வது நல்லது. தினமும் ஆஞ்சனேயரை வழிபடவும். குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பயன்படுத்துவது அதிர்ஷ்டம் தரும்.

மகரம்

இந்த வாரம் மகர ராசியினருக்கு தன ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். நண்பர்களின் உதவி ஆறுதலைத் தரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கும் நற்பெயரும் உயர்ந்து, மதிப்பு அதிகரிக்கும்.

தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பணியிடத் தடைகளைத் தாண்டி சாதனை படைப்பீர்கள்.

மூட்டு வலி அல்லது கால் வலி ஏற்படலாம். அதிக உழைப்பைத் தவிர்த்து ஓய்வெடுக்கவும். நடைப்பயிற்சியில் அளவோடு ஈடுபடுவது நல்லது. சனீஸ்வரரை வழிபடவும். ஊதா நிறக் கைக்குட்டை அல்லது பேனா பயன்படுத்துவது அதிர்ஷ்டம் தரும்.

கும்பம்

இந்த வாரம் கும்ப ராசியினருக்கு ராகுவின் நிலையால் செலவுகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கும். பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சேமிப்பில் கூடுதல் கவனம் தேவை.

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். நண்பர்கள் இக்கட்டான நேரத்தில் உதவுவார்கள். சமூகத்தில் உங்கள் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் கவனமாகப் பேசிச் செயல்படுவது அவசியம்.

தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணியிடத்தில் ஏற்படும் சிறு தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

கால் வலி அல்லது நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். போதிய ஓய்வு அவசியம். முக்கிய விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காளி தேவியை வழிபடவும். அடர் பச்சை நிறக் கைக்குட்டை வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

மீனம்

இந்த வாரம் மீன ராசியினருக்கு சனியின் தாக்கத்தால் செலவுகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் குருவின் அருளால் பணவரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் அவசர முடிவுகளைத் தவிர்த்து, ஆலோசித்து செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் அமைதியை நிலைநிறுத்த விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் வழியில் சிறு மனக்கவலைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் நற்பெயரைப் பாதுகாக்கப் பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம்.

தொழிலில் கடின உழைப்புக்குப் பின்னரே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். சவால்களைப் பொறுமையுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பாத வலி அல்லது தூக்கமின்மை ஏற்படலாம். இரவில் அமைதியான தூக்கத்துக்கு உரிய நேரத்தை ஒதுக்குவது நல்லது. போதிய ஓய்வு எடுக்கவும். அன்றாடம் பைரவரை மனதால் வழிபடவும். சிவப்பு கலந்த மஞ்சள் நிறக் கைக்குட்டை, ஆடை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com