

சென்னை,
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 815 ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில், தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,615-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.