இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. ஒரேயடியாக குறைந்த தங்கம் விலை.!

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. ஒரேயடியாக குறைந்த தங்கம் விலை.!
Published on

சென்னை

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் உச்சத்தில் இருக்கும் சூழலில், கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருவதால், தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின்னர் தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்தது. இதன்படி தினமும் புதிய உச்சம் என்ற போக்கில் இருந்த தங்கம், இப்போது தினமும் சரிவு என்ற பாதையில் பயணிக்க தொடங்கி இருந்தது.

நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கும், கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது. விடுமுறை தினம் என்பதால், நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.5,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

23.03.2026 ஒரு சவரன் ரூ. 1,03,600 (இன்று)

22.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960 (நேற்று)

21.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960

20.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,600

19.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,200

X

Daily Thanthi
www.dailythanthi.com