மேலும் அதிகரித்த ஆபரணத் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் அதிகரித்த ஆபரணத் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் காலையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது.

மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து இருந்தது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.162-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிவிலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (இன்று)

03.10.2025 ஒரு சவரன் ரூ.87,200 (நேற்று)

02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

01.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880

29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160

X

Daily Thanthi
www.dailythanthi.com