

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.