

சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.1,240-ம், கிராமுக்கு ரூ.155-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும், ஒரு கிராம் ரூ.13,040-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.310 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 25-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை விலை மாற்றம் இல்லாமல் இருந்து, கடந்த 2 நாட்களாக விலை குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.