

சென்னை,
சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20-ந்தேதி கிராமுக்கு ரூ.13,600, பவுனுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800 இருந்த தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருக்கிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் விற்பனை ஆனது. அதன்படி, ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் 13.030-க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 26-ந்தேதி முதல் விலை மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த வெள்ளி இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.