தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
Published on

சென்னை,

கடந்த 1-ம் தேதி குறைந்து விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை 7-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com