

சென்னை,
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800-ம், கிராமுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.