

சென்னை,
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 20-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் குறைந்திருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.1,240-ம், கிராமுக்கு ரூ.155-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.