தங்கம் விலை மேலும் குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640-ம், கிராமுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.13,490-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரையில் கடந்த 5 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.230-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com