தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்த நிலையில், இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,370-க்கும், சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.1,680 அதிரடியாக குறைந்தது.

மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.1,13,400-க்கும், கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com