

சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஞாயிறு விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வார தொடக்கமான இன்று தங்கம் விலையில் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.