

சென்னை,
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதல் ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது. நேற்று சவரனுக்கு ரூ.280-ம், கிராமுக்கு ரூ.35-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.760 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.95 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் 12-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.