தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.
தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன.?
Published on: 

சென்னை,

வார தொடக்கமான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சற்று உயர்ந்தது. அதாவது, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,535-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், வார தொடக்கமான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com