தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.840-ம், கிராமுக்கு ரூ.105-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,520-க்கும், ஒரு கிராம் ரூ.13,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் 1,11,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் 8-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com