

சென்னை,
தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,195-க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலையில் 4-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.