

சென்னை,
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13,950-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.