

சென்னை,
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கம் நீடிக்கிறது. அப்படியாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலையில் பெருமளவில் இறக்கமே இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை மாற்றம் கண்டது.
நேற்று காலையில் கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்தது. பின்னர் நேற்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. நேற்று மதியம் நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் ஒரே நாளில் இருமுறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில் மாலையில் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.