காலையில் குறைந்து, பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160-ம், கிராமுக்கு ரூ.270-ம் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com