தங்கம் விலை அதிரடி உயர்வு.! - இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை அதிரடி உயர்வு.! - இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது.

நேற்று முன் தினம் தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,15,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கு விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் நேற்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

Also Read
மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை அதிரடி உயர்வு.! - இன்றைய நிலவரம் என்ன.?

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com