

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ந்தேதி உயர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் விலை குறைந்து, பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் சற்று விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.800-ம், கிராமுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையை பொறுத்த வரையில் மாலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.