

சென்னை,
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் நேற்று தங்கம் விலையில் 3 முறை மாற்றம் ஏற்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.670-ம், பிற்பகலில் ரூ.280-ம் குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக கிராமுக்கு ரூ.670 உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,06,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும், கிராமுக்கு ரூ.340 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.2,000 ஆயிரம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.250 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்த வரையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.