தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. இதற்கு காரணம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி (அடிப்படை சுங்கவரி 10 சதவீதம், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி 5 சதவீதம் சேர்த்து) மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டதுதான். இந்த 9 சதவீத வரி உயர்வு நேற்று முதலே அமலுக்கு வந்து விட்ட காரணத்தினால், தங்கம், வெள்ளி மீதான விலையிலும் நேற்றே தாக்கம் எதிரொலித்துவிட்டது.

நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,070-ம், சவரனுக்கு ரூ.8,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.15,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,000-க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com