

சென்னை,
தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே இறக்கத்தை சந்தித்து வந்தது. கடந்த 19-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3,040-ம், கிராமுக்கு ரூ.380-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.
வார தொடக்கமான நேற்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.