தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 23-ந்தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ.92 ஆயிரமாக குறைந்தது. தொடர்ந்து 24-ந்தேதி தங்கத்தின் விலை குறைந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. கடந்த 25-ந்தேதி சற்று உயர்ந்து சவரன் ரூ.92 ஆயிரமாக அதிகரித்தது. 26-ந்தேதியும் அதேவிலையில் விற்பனையானது.

இந்த சூழலில் தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்தது. இதன்படி நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் கடந்த 7 நாட்களாக மாற்றமின்றி (நேற்றும்) 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும், 1 கிராம் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

28.10.2025 ஒரு சவரன் ரூ.90,400 (இன்று)

27.10.2025 ஒரு சவரன் ரூ.91,600 (நேற்று)

26.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

25.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

24.10.2025 ஒரு சவரன் ரூ.91,200

23.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

X

Daily Thanthi
www.dailythanthi.com