

சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும். கிலோ ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.