தங்கம் விலை திடீர் சரிவு - இன்றைய நிலவரம் இதோ

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை திடீர் சரிவு  - இன்றைய நிலவரம் இதோ
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

Also Read
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை திடீர் சரிவு  - இன்றைய நிலவரம் இதோ

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (20.04.2026 திங்கள்கிழமை) திடீர் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

20.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,400 (இன்று)

18.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880 (நேற்று முன்தினம்)

17.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,680

16.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

15.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,560

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com