

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.