

சென்னை,
தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 29-ம் தேதி சற்று அதிகரித்தது.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினமும் சற்று அதிகரித்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
01.06.2026 ஒரு சவரன் ரூ.1,16,000 (இன்று)
30.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,040 ((நேற்று முன்தினம்)
29.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,800
28.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,000
27.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,200