காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்திருந்தது.
காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலை நிலவரம்

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மாலை நிலவரம்

இந்த நிலையில், காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று காலை குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மாலை நிலவரப்படி, வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com