ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் மேலும் குறைந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 5-ந்தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும், இன்றும் தங்கம் விலை குறைந்தது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,640-க்கும், ஒரு கிராம் ரூ.13,330-க்கமு் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று மாலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com