ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில், மாலையில் மேலும் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 19-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 25-ந்தேதியில் இருந்து விலை சற்று உயரத் தொடங்கியது. இதனையடுத்து நேற்று விலை மீண்டும் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று காலையிலும் தங்கம் விலை குறைந்தது.

அதன்படி இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை இன்று காலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மாலையில் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com