ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில்,மாலையில் மேலும் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று மாலை அதிரடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் தங்கம் விலை குறைந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14,050-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது.

வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி அதை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com