தங்கம் விலை அதிரடியாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?

தங்கம் விலை கனிசமான அளவிலேயே உயர்ந்து வந்தது.
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி உயர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் விலை குறைந்து, பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வந்தது. பெரிய அளவில் உயர்வு இல்லாமல் கனிசமான அளவிலேயே உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,480-க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,810-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலைமாற்றமின்றி நேற்று முன்தினத்தின் விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.04.2026 ஒரு சவரன் - ரூ.1,10,480 (இன்று)

04.04.2026 ஒரு சவரன் - ரூ.1,11,600 (நேற்று முன்தினம்)

03.04.2026 ஒரு சவரன் - ரூ.1,10,800

02.04.2026 -ஒரு சவரன் ரூ.1,10,000

01.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,400

31.03.2026 ஒரு சவரன் ரூ.1,09,360

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com