

சென்னை,
தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்து இருந்தது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,200-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னையில் 2-வது நாளாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.