2-வது நாளாக தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?

தங்கம் விலை கடந்த 26-ந்தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது.
2-வது நாளாக தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை கடந்த 26-ந்தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

30.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,040 (இன்று)

29.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,800 (நேற்று)

28.05.2026 ஒரு சவரன் ரூ.1,16,000

27.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,200

26.05.2026 ஒரு சவரன் ரூ.1,17,840

X

Daily Thanthi
www.dailythanthi.com