

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.
இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்று விடுமுறை தினம் என்பதால தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.5 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.