தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com