சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலை 3-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை உயர்ந்து வந்து, 28, 29-ந்தேதிகளில் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையில் 2-வது நாளாக நேற்றும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ25. உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை 3-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com