மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருந்தது.
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதன்படி கடந்த 3-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.800 விலை குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருந்தது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் விலை குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.163-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.164க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.11.2025 ஒரு சவரன் ரூ.90,000 (இன்று)

05.11.2025 ஒரு சவரன் ரூ.89,440 (நேற்று)

04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000

03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800

02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

01.11.2025 ஒரு சவரன் ரூ.90,480

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com