சற்று குறைந்த ஆபரண தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த 23-ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
சற்று குறைந்த ஆபரண தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக் கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

நேற்று முன் தினம் நிலவரப்படி கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.

நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080 (இன்று)

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800 (நேற்று)

23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440

21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com