சவரனுக்கு ரூ.3,040 சரிவு.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.
சவரனுக்கு ரூ.3,040 சரிவு.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
Published on

சென்னை,

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் நீடிக்கிறது. அந்த வகையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் விலை குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், ஆபரணத்தங்கம் விலை இன்று அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 7 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

19.06.2026 ஒரு சவரன் ரூ.1,08,560 (இன்று)

18.06.2026 ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

17.06.2026 ஒரு சவரன் ரூ.1,12,240

16.06.2026 ஒரு சவரன் ரூ.1,12,480

15.06.2026 ஒரு சவரன் ரூ.1,12,560

14.06.2026 ஒரு சவரன் ரூ.1,10,880

13.06.2026 ஒரு சவரன் ரூ.1,10,880

X

Daily Thanthi
www.dailythanthi.com