தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிரடியாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த மே மாதத்திற்கு பிறகு நேற்று மீண்டும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து ரூ.55,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,905-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.99.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com