மாநில செய்திகள்


சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்: பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

பதிவு: பிப்ரவரி 17, 05:15 AM

குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யார் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 05:00 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 4 நாட்களாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுடன் நிறைவுபெற்றது.

பதிவு: பிப்ரவரி 17, 04:45 AM

முஸ்லிம்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க. உள்ளது - இல.கணேசன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் போராட்டத்துக்கு பின்னணியில் தி.மு.க. உள்ளது என இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: பிப்ரவரி 17, 04:30 AM

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் முஸ்லிம்கள் 3-வது நாளாக போராட்டம் - அமைச்சருடன் ஜமாத் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் 3-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் ஜெயக்குமாருடன் ஜமாத் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பதிவு: பிப்ரவரி 17, 04:30 AM

சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர், சர்வதேச விமான நிலையமாகிறது

சென்னையில் 2-வது விமான நிலையமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அமைகிறது. இங்கு இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்தை மெட்ரோ ரெயில், இலகு ரெயில் போக்குவரத்து மூலமாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 04:15 AM

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இல்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதிவு: பிப்ரவரி 17, 04:15 AM

தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை: காதலர் தினத்தில் வெளியே சென்று வந்ததால் கணவர் வெறிச்செயல்

காதலர் தினத்தன்று வெளியே சென்று வந்த மனைவியை, தலையில் கல்லை போட்டு கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 17, 04:00 AM

தமிழகத்தில் தொடர் போராட்டம் எதிரொலி: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை, போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: பிப்ரவரி 17, 03:45 AM

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில், உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 17, 03:30 AM
மேலும் மாநில செய்திகள்

5

News

2/17/2020 5:30:53 AM

http://www.dailythanthi.com/News/State