சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com