வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com