வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வரும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வரும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பட்ஜெட் எதிரொலியாக நேற்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com